இந்தியாவில் இப்படி ஒரு பேய் நகரமா? நீங்க கேள்விப் பட்டிருக்கீங்களா!
நவாப்களின் நகரமான லக்னோ, ஒரு காலத்தில் நிகழ்ந்த பல அப்பாவி மக்களின் மரணங்களுக்கு சாட்சியாக உள்ளது, அதனால் லக்னோவில் நிறைய பேய் இடங்கள் இருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகவும் உள்ளது.
புகழ்பெற்ற சிக்கந்தர் பாக் மற்றும் பரா இமாம்பரா முதல், ஓஇஎல் ஹவுஸ், பால்ராம்பூர் மருத்துவமனை மற்றும் பேகம் கோதி வரை, இந்த லக்னோ இறந்தவர்களின் கதைகளைச் சுமந்துள்ளது.
உங்கள் நம்பிக்கையை மாற்றிக் கொள்ளக்கூடிய அளவிற்கு வற்புறுத்தக் கூடிய இந்தக் கதைகளைப் படித்தும், நீங்கள் பேய்களை நம்பவில்லை என்றால் லக்னோவில் உள்ள இந்த பேய் இடங்களை நீங்கள் ஏன் சென்றுப் பார்க்கக் கூடாது?
ஓஇஎல் (OEL) ஹவுஸ்
லக்னோவில் உள்ள ஓஇஎல் ஹவுஸில் ஒரு கதை உள்ளது, அது உங்களுக்கு தூக்கமில்லாத இரவுகளைத் தரும்! தற்போது லக்னோ பல்கலைக்கழக துணைவேந்தரின் இல்லமான ஓ.இ.எல் ஹவுஸ் ஒரு காலத்தில் நவாப் வாஜித் அலி ஷாவின் இல்லமாக இருந்தது.
1857 ஆம் ஆண்டு போரின் போது, ஏராளமான பிரிட்டிஷ் வீரர்கள் கொல்லப்பட்டு அந்த வீட்டிற்குள் இருந்த கிணற்றில் வீசப்பட்டனர். இறந்த வீரர்களின் ஆவிகள் பின்னர் கிணற்றையும் வீட்டின் சுவர்களையும் கைப்பற்றியதாக உள்ளூர் மக்கள் நம்புகின்றனர்.
கிணற்றின் அருகே ஒரு சிறுவன் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஒரு நிகழ்வின் காரணமாக இந்த இடத்தில் பேய் இருக்கிறது என்று மக்கள் நம்புகிறார்கள்.
சிறுவன் கிணற்றில் கூழாங்கற்களை வீசி எறிந்ததாகக் கூறப்படுகிறது, இது உள்ளே இருந்த ஆவிகளை எரிச்சலூட்டியது அதனால் அந்த சிறுவன் தனது உயிரை விட நேர்ந்தது. அப்போதிருந்து ஓ.இ.எல் ஹவுஸ்ஸின் பேய் கதைகள் நகரத்தில் காட்டுத் தீ போல பரவியது.
பாரா இமாம்பரா
பாரா இமாம்பரா அல்லது பூல்புலையா என அழைக்கும் இப்பகுதிக்குப் பல முறை நான் சென்றிருந்தாலும் வழிகாட்டி இல்லாமல் ஒரு முறை கூட சென்றதில்லை! ஆம், என்னால் தைரியம் கொடுக்க முடியவில்லை, ஏனென்றால் இந்த கட்டடக்கலை அற்புதத்திற்குள் இருக்கும் வினோதமான பிரமைகள் மிகவும் பயமுறுத்துவதாய் இருக்கிறது. ஒரு நபர் பிரமைகளுக்குள் தொலைந்து போனால், அதற்கான வழியைக் கண்டுபிடிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.
இங்கே சொல்வது இந்த வித்தியாசமான பிரமைகள் உங்களை சாப்பிட முடிவு செய்துவிடுகின்றன, அவற்றை யாரும் தடுக்க முடியாது!
மேலும், கட்டிடத்தின் உள்ளே இருந்த தெஹானா ஒரு காலத்தில் சிறைச்சாலையாக இயங்கியது, அங்கு பிரிட்டிஷ்காரர்கள் இந்திய ஆண்களை சிறைபிடித்து வைத்திருந்தனர். உண்மையில், வளாகத்திற்குள் விவரிக்க முடியாத படங்களை பலராலும் கைப்பற்ற முடிந்தது!
ரயில்வே குடியிருப்புகள்
இது காதல் மற்றும் துரோகத்தின் கதை! பேய் கதைகளைக் கொண்ட இந்த ரயில்வே குடியிருப்புகளில் ஒரு குடியிருப்பைத் தலைமை பொறியாளரான பில் டர்ணருக்கு ஒதுக்கப்பட்டது.
அவர் முழு இதயத்தோடும் காதலோடும் நேசித்த ஒரு அழகான பெண்ணை மணந்தார். ஒரு நாள் அவருடைய மனைவியைக் காண வீட்டிற்கு வந்தார் அப்போது அவருடைய மனைவி ஒரு அழகான இளம் பையனுடன் தவறான முறையில் அந்த வீட்டில் இருந்ததைப் பார்த்தார்.
பார்த்தவுடன் அவருக்கு இரத்தம் கொதித்தது, தனது துப்பாக்கியை எடுத்து தனது அழகான புதிய மனைவியையும் அந்த சிறுவனையும் சுட்டுக் கொன்றார், பின்னர் அவரும் தற்கொலை செய்து கொண்டார்.
அப்போதிருந்து, அந்த குடியிருப்பு பேய் வீடாக ஆனது, மேலும் வித்தியாசமாக உயரமான வெள்ளை மனிதர் ஒருவர் அங்கு சுற்றித் திரிவதைக் கண்டதாகவும் வித்தியாசமான சத்தங்கள் கேட்பதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
சிக்கந்தர் பாக்
சிக்கந்தர் பாக் லக்னோவில் மிகவும் பிரபலமான நகரம். சிலிர்ப்பான அனுபவத்திற்கு நீங்கள் தாங்களாகவே இங்கே வருகை தர வேண்டும். வந்து அதன் பின்னால் உள்ள உண்மையை உணர வேண்டும்.
1857 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்காக நடந்த போரிற்குப் பிறகு தான் அந்த பகுதி பேய்கள் நிறைந்த பகுதியாக மாறியது. அரசு ஆவணப்படி ஆயிரக்கணக்கான இந்திய ஆண்கள் பிரிட்டிஷ் காவலர்களால் கொடூரமாக சொல்லப்பட்டனர்.
அவர்களின் இறுதி சடங்கிற்குக் கூட அனுமதிக்கவில்லை. அந்த சடலங்களை அங்கேயே வீசினர். அவற்றைக் கழுகுகள் தின்றன. அந்த மனிதர்களின் ஆவிகள் சிக்கந்தர் பாக் வளாகத்தை வேட்டையாடுகின்றன என்று அந்த பகுதி மக்கள் பரிபூரணமாக நம்புகின்றனர்.
மேலும் அங்கிருந்து வித்தியாசமான சத்தங்களும் அழுகை சத்தங்களும் வருவதாய் கூறுகின்றனர். சூரிய மறைவிற்குப் பிறகு யாரும் அங்கு செல்வதில்லை. ஏனென்றால் இரவு நேரங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிகப்படியான குளிராக அந்த இடம் மாறிவிடுகிறது.
பால்ராம்பூர் மருத்துவமனை
இந்த மருத்துவமனையைப் பார்த்தால் உங்களுக்கு குளிர்ச்சி உணர்வைத் தரும்! இந்த மருத்துவமனை பிரிட்டிஷ் வீரர்களால் கல்லறையின் மீது கட்டப்பட்டது.
நீங்கள் எப்போதாவது மருத்துவமனைக்குள் செல்ல முடியும் என்றால், அங்குள்ள சில கல்லறைகளை நீங்கள் இன்றும் கவனிக்கலாம். பல பயங்கரமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன அதோடு நோயாளிகள் மருத்துவமனையின் உள்ளே எதிர்மறையை உணர்ந்திருக்கிறார்கள்.
சில நோயாளிகள் ஜன்னல்களில் அசாதாரண காட்சிகளைக் கண்டதாகக் கூறுகின்றனர். எல்லாம் விவரிக்கப்படாமலே போகிறது!
Post a Comment