அவசரப்பட்டு ஒன்பிளஸ் 8 ப்ரோ வாங்கியவர்களின் "பரிதாப" நிலை!
ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த மாதம் அறிமுகம் செய்த அதன் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் “க்ரீன் டின்ட்” மற்றும் “பிளாக் க்ரஷ்” டிஸ்பிளே சிக்கல்கள் இருப்பதை ஒப்புக் கொண்டு ஒரு அறிக்கையை வெளியிட்டது.
அந்த அறிக்கை வெளியான சில நாட்களுக்குப் பிறகு, டிஸ்பிளே சிக்கல்களை சரிசெய்ததாகக் கூறப்படும் புதிய அப்டேட்களையும் நிறுவனம் வெளியிட்டது. இருப்பினும், இணையம் முழுவதிலும் உள்ள ஒன்பிளஸ் 8 ப்ரோ பயனர்கள் குறிப்பிட்ட டிஸ்பிளே சிக்கல்கள் இன்னும் நீடிப்பதாகக் கூறுகின்றனர்.
ரெடிட் ஒன்பிளஸ் கம்யூனிட்டியை சேர்ந்த ஒரு பயனரின்படி, ஒன்பிளஸ் சப்போர்ட் எக்சிக்யூட்டிவ் ஒருவர் இந்த “பிளாக் க்ரஷ்” சிக்கலை ஒரு வன்பொருள் குறைபாடு என்பதை ஒப்புக் கொண்டுள்ளார், மேலும் ஒன்பிளஸ் நிறுவனம் பழுதுபார்ப்பு, பணத்தைத் திரும்பப் பெறுதல் அல்லது மாற்றீடு உள்ளிட்ட விருப்பங்களையும் வழங்குகிறது என்று கூறியுள்ளார்.
இருப்பினும், ஒன்பிளஸ் நிறுவனம் இந்த சிக்கலை பகிரங்கமாக ஒற்றுக்கொள்ளவில்லை மற்றும் கவனிக்கவில்லை, எனவே, ஒன்பிளஸ் 8 ப்ரோவின் மாற்று அல்லது பணத்தைத் திரும்பப் பெறும் கொள்கை குறித்த கூடுதல் தகவல்கள் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ஏப்ரல் மாத இறுதியில் ஒன்பிளஸ், ஒன்ப்ளஸ் 8 ப்ரோவில் காணப்பட்ட டிஸ்பிளே சிக்கல்களை பல மென்பொருள் அப்டேட்களை கொண்டு ஒன்பிளஸ் நிறுவனம் தீர்க்க முயற்சித்தது. அதனொரு பகுதியாக ஒன்பிளஸ் நிறுவனம் ஆக்ஸிஜன்ஓஎஸ் 10.5.5 மற்றும் ஆக்ஸிஜன்ஓஎஸ் 10.5.6 அப்டேட்களை வெளியிட்டது.
இருப்பினும், சில பயனர்களுக்கான க்ரீன் டின்ட் மற்றும் கருப்பு க்ரஷ் டிஸ்பிளே சிக்கல்கள் முழுமையாக தீர்க்கப்படவில்லை என்று ஆன்லைன் வழியாக தெரிவித்து வருகின்றன.
நினைவூட்டும் வண்ணம், கடந்த ஏப்ரல் 21 அன்று ஐரோப்பாவிலும் இங்கிலாந்திலும் ஒன்பிளஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தபிறகு, அதில் பல சிக்கல்கள் வெளிவந்தன.
ஒன்பிளஸ் கம்யூனிட்டி ஃபோரம் பயனர்களின் கூற்றுப்படி, ஒன்பிளஸ் 8 ப்ரோ டிஸ்பிளே ஆனது பிரைட்னஸ் குறைப்பின்போது பச்சை நிற சாயலைக் காட்டுகிறது. ஒன்பிளஸ் நிறுவனம் குறிப்பிட்ட பச்சை நிற சிக்கலை சரிசெய்யும்போது ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மற்றொரு சிக்கலை சந்தித்தது. பச்சை நிறத்தை சரிசெய்ய டி.சி டிம்மிங் விருப்பத்தை முடக்கிய பின்னர், பிளாக் க்ரஷ் சிக்கல் வெளிப்பட்டது.
தற்போது வரையிலாக, ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ மாடல்கள் இன்னும் இந்திய நுகர்வோரை எட்டவில்லை. ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய விலையை வெளிப்படுத்திய போதிலும், ஒன்பிளஸ் 8 தொடரின் கிடைக்கும் தன்மை குறித்து இன்னும் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த ஸ்மார்ட்போன்கள் இந்திய நுகர்வோரை அடைவதற்கு முன்பு ஒன்பிளஸ் நிறுவனம் இந்த டிஸ்பிளே சார்ந்த சிக்கல்களை தீர்க்கும் என்று நம்புகிறோம்.
Post a Comment