Header Ads

பொழுது போகலனு.. கூகுள்ல "தெரியாம கூட" இதெல்லாம் தேடிடாதீங்க!

உண்பது, உறங்குவது, சுவாசிப்பது போல கூகுள் செய்வதும் ஒரு அத்தியாவசியமான விடயமாகி விட்டது. யாரேனும் உங்களுக்கு தெரியாத ஒரு கேள்வியை கேட்டு விட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? உடனடியாக கூகுள் செய்வீர்கள், அப்படித்தானே? இப்படியாக நமக்கு தெரியாத விஷயங்களின் பதில்களை அறிய உடனடியாக ‘கூகுளிங்’ செய்து பார்க்க நம்மில் பெரும்பாலோர் பழகிவிட்டோம். பாயசம் வைப்பது எப்படி என்பது தொடங்கி ‘பாம்ப்’ செய்வது எப்படி என்பது வரையிலாக அனைத்து கேள்விகளுக்கும் கூகுளிடம் பதில்கள் உண்டு. இப்படியாக கூகுள் செய்யும் போது நம்மில் பெரும்பாலானவர்கள் ஒரு குறிப்பிட்ட விடயத்தை மறந்து விடுகிறார்கள். அதாவது, கூகுள் என்பதும் ஒரு ஆன்லைன் தளம்தான், கூகுள் ஒன்றும் அதன் சொந்த உள்ளடக்கத்தை கொண்டிருக்கவில்லை. அங்கே உங்களுக்கு தேவையான தகவல்களை வழங்கும் வலைத்தளங்கள் உள்ளது, அவ்வளவுதான்! அதாவது”ஆன்லைன் ஆபத்துகள்” என்கிற பட்டியலின் கீழ் உள்ள அத்துணை “ஆப்புகளும்” கூகுளிலும் உள்ளது என்று அர்த்தம். ஒருவேளை நீங்கள் இதுபோன்ற ஆப்புகளில் அல்லது ஆபத்துகளில் சிக்கி கொள்ளாமல் இருக்க விரும்பினால் எக்காரணத்தை கொண்டும் கூகுள் வழியாக இந்த 12 மேட்டர்களையும் தேட வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறீர்கள்! மீறி தேடினால், பிறகு நாங்கள் பொறுப்பில்லை!

01. கூகுள் வழியாக ஆன்லைன் பேங்கிங் தளங்களை தேட வேண்டாம்!

ஒருவேளை உங்கள் வங்கியின் சரியான அதிகாரப்பூர்வ URL ஆனது உங்களுக்குத் தெரியாவிட்டால், அதை கண்டுபிடிக்க வெறுமனே உங்கள் வங்கி பெயரை டைப் செய்து ஆன்லைன் பேங்கிங் என்று தேடுவதை தவிர்க்கவும். ஏனெனில் கூகுளில் பல போலியான ஆன்லைன் பேங்கிங் வலைத்தளங்கள் உள்ளன.

பெரும்பாலான போலியான வலைத்தளங்கள் ஆனது குறிப்பிட்ட வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் போல தோற்றமளிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். ஆக உங்கள் பணத்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய உங்கள் வங்கியின் அதிகாரபூர்வமான ஆன்லைன் வங்கி போர்ட்டலின் URL ஐ கூகுளில் உள்ளிடவும். இல்லையெனில் ஃபிஷிங் போன்ற ஆன்லைன் திருடர்களின் கைகளில் தானாகவே போய் சிக்கிகொள்வீர்கள்.

02. கூகுள் வழியாக கஸ்டமர் கேர் எண்களை தேட வேண்டாம்!

இது மிகவும் பிரபலமான ஆன்லைன் மோசடிகளில் ஒன்றாகும். இம்மாதிரியான மோசடிகளில் ஈடுபடுவபர்கள் போலியான வணிக பட்டியல்களையும், கஸ்டமர் கேர் எண்களையும் வலைத்தளங்களில் பதிவு செய்து வைத்திருப்பார்கள். அதை உண்மை என்று நம்பி அவர்களின் கையில் சிக்கும் வாடிக்கையாளர்களிடம் விலாசம் அல்லது வங்கி விவரங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் தொடங்கி பணம் பறிப்பு வரையிலான மோசடிகள் கட்டவிழ்க்கப்படும்.

03. ஆப்ஸ் மற்றும் சாப்ட்வேர் டவுன்லோட்டிற்காக கூகுளை அணுக வேண்டாம்!

நீங்கள் எதாவதொரு மொபைல் ஆப்பை டவுன்லோட் செய்ய விரும்பினால், தயவு செய்து வெறுமனே அதன் பெயரை டைப் செய்து கூகுள் வழியாக தேட வேண்டாம். அது Android ஆப் என்றால் Google Play-விற்கு செல்லவும் அல்லது அது ஐஓஎஸ் ஆப் என்றால் ஐபோன்களுக்கான ஆப் ஸ்டோருக்கு செல்லவும், அதாவது அந்தந்த இயங்குதளத்திற்கான அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோருக்கு செல்லவும், அங்கே குறிப்பிட்ட ஆப்ஸ்களை தேடவும். மாறாக வெறுமனே கூகுள் வழியாக ஆப்ஸ்களை தேடினால், மால்வேர் உள்ளடக்கத்துடன் கூடிய போலி ஆப்ஸ்களை நீங்கள் இன்ஸ்டால் செய்வதற்கான ஆயிரமாயிரம் வழிகள் ரெடியாக இருக்கும்.

04. மருந்துகள் அல்லது மருத்துவ அறிகுறிகளை கூகுளில் தேட வேண்டாம்!

தெளிவாக புரிந்து கொள்ளவும், கூகுள் என்பது மருந்துகளைத் தேடுவதற்கான ஒரு இடம் அல்ல. நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது ஒரு நோயைப் பற்றி அறிய மருத்துவர் ஒருவரை பார்ப்பதை விட்டுவிட்டு, கூகுள் வழியாக தேடல்களை நிகழ்த்தி அதன் வழியாக கிடைக்கும் மருந்துகளையும், அதன் வழியாக கிடைக்கும் தகவல்களை உங்களுக்கானது என்று நீங்கள் ஏற்றுக்கொண்டால் (மன்னிக்கவும்) உங்களை விட பெரிய முட்டாள் யாருமில்லை.

மஞ்சள் தூளை பாலில் போட்டு குடித்தால் பறந்து போகும் சாதாரணமான சளிப்பிரச்சனையை கூட கேன்சர் என்று கூகுள் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆக எக்காரணத்தை கொண்டும் கூகுளில் நோய் சார்ந்த விடயங்களை பற்றி தேட வேண்டாம், தேடிப்பிடித்தாலும் அதை உண்மையென நம்பவும் வேண்டாம். குறிப்பாக நீங்கள் கண்டறிந்த தகவல்களின் அடிப்படையில் மருந்துகளை வாங்க வேண்டாம்.

05. ஊட்டச்சத்து அல்லது எடை குறைப்பு பற்றிய மருத்துவ ஆலோசனைகளை கூகுள் வழியாக தேட வேண்டாம்!

நீங்கள் சோர்வாக இருப்பதாக உணர்ந்தால், மருத்துவரிடம் செல்லுங்கள். ஒருவேளை நீங்கள் உங்களின் உணவு பழக்கங்களை மாற்ற விரும்பினால், ஒரு டயட்டீஷியனை சென்று பார்க்கவும். மாறாக நீங்களே உங்களை சரி செய்துகொள்ள விரும்பினால் அல்லது நீங்களே உங்களின் எடையை குறைக்க விரும்பினால், நீங்கள் மிகவும் துல்லியமான வழிமுறைகளை பின்பற்றுகிறீர்கள் என்பது ஒன்றுக்கு இரண்டு முறை உறுதிசெய்து கொள்ளவும்.

ஏனெனில் ஒவ்வொரு மனித உடலும் தனித்துவமானது, கூகுள் ஆனது பொதுவான வழிமுறைகளை மட்டுமே மற்றும் பொதுவான ஆலோசனைகளை மட்டுமே வழங்கும். குறிப்பிட்ட வழிமுறையோ அல்லது ஆலோசனையோ உங்கள் உடலுக்கு ‘செட்’ ஆகாவிட்டால், பக்க விளைவுகளும் அதன் வழியிலான மருத்துவர் சந்திப்பும் அதன் வழியிலான செலவும் நிச்சயமாக நடக்கும்!

06. கூகுள் வழியாக நிதி மற்றும் பங்குச்சந்தை சார்ந்த தீவிரமான ஆலோசனை அல்லது வழிகாட்டியை தேட வேண்டாம்!

மருத்துவ ஆலோசனைகளை போலே, நிதி சார்ந்த விடயங்களும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும், ஏனெனில் எல்லோருமே ஒரே மாதிரியான சம்பளத்தை வாங்குவதில்லை. ஒரே நேரத்தில் அனைவரையுமே பணக்காரர்களாக மாற்றும் ஒரு முதலீட்டுத் திட்டம் என்பது இந்த உலகத்திலேயே கிடையாது, ஒருபோதும் இருக்கவும் முடியாது. ஆக, முதலீடு சார்ந்த முடிவுகளை கூகுள் தேடல் வழியாக நிகழ்த்தும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் நிச்சயமாக ஒரு படித்த முட்டாளாகத்தான் இருக்க வேண்டும் (மீண்டும் மன்னிக்கவும்)!

07.கூகுள் வழியாக அரசாங்க வலைத்தளங்களைத் தேட வேண்டாம்!

samayam tamil

ஏனெனில் ஆன்லைன் பேங்கிங் வலைத்தளங்களைப் போலவே, நகராட்சி வரி, மருத்துவமனைகள் போன்ற அரசாங்க வலைத்தளங்களும் கூட ஆன்லைன் மோசடி செய்பவர்களின் பிரதான இலக்குகளாகும். எந்த வலைத்தளம் அசல் என்பதை அடையாளம் காண்பது கடினம் என்பதால், எந்த குறிப்பிட்ட அரசாங்க வலைத்தளத்தையும் வெறுமனே கூகுளில் டைப் செய்து தேட வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறீர்கள், மாறாக அதிகாரபூர்வமான வலைத்தளத்தின் யூஆர்எல்-ஐ அறிந்து வைத்துக்கொள்ளுங்கள், அதை நேரடியாக டைப் செய்து அதற்குள் உள்நுழையவும்!

08. கூகுள் வழியாக சோஷியல் மீடியாக்களுள் லாகின் செய்யாதீர்கள்!

samayam tamil

நம்பினால் நம்புங்கள்! இதிலும் நாம்மேற்கண்ட அதே சிக்கல் இருக்கிறது. ஃபேஸ்புக் ஆக இருந்தாலும் சரி, இன்ஸ்டாகிராமாக இருந்தாலும் சரி, எப்போதுமே உங்களின் ப்ரவுஸரில் உள்ள அட்ரெஸ் பாக்ஸில் URL ஐ நேரடியாக டைப் செய்து குறிப்பிட்ட சமூக ஊடக அக்கவுண்ட்களுக்குள் செல்லுங்கள். அதற்கு பதிலாக கூகுளில் டைப் செய்து லாகின் பக்கத்தை தேடினால், நீங்கள் ஃபிஷிங் போன்ற ஆன்லைன் மோசடிக்குள் சிக்க நேரிடலாம்.

09. கூகுள் வழியாக ஈ-காமர்ஸ் வலைத்தளங்கள் அல்லது சலுகைகளை தேட வேண்டாம்!

samayam tamil

குறிப்பிட்ட ஈ-காமர்ஸ் வலைத்தளங்களில் அட்டகாசமான சலுகைகள் என்கிற செய்தி இணைப்புகளை கிளிக் செய்யலாம். ஆனால் குறிப்பிட்ட சலுகைகளை பெற இதற்குள் நுழையவும் அல்லது இங்கே கிளிக் செய்யவும் என்று கூறும் இணைப்புகளை தயவு செய்து கிளிக் செய்ய வேண்டாம். ஏனெனில் கூகுள் இதுபோன்ற போலி வலைப்பக்கங்களால் நிறைந்துள்ளது, இது மற்றொரு உன்னதமான மோசடி ஆகும்.

இதில் மக்கள் தங்கள் ஆன்லைன் வங்கி உள்நுழைவு விவரங்களை இழக்க நேரிடுகிறது. பெரும்பாலான மக்கள் இப்படியான தீங்கிழைக்கும் வலைத்தளங்களைக் கிளிக் செய்வதற்கான முக்கியமான காரணாம் – கவர்ச்சிகரமான ஒப்பந்தங்கள் தான்!

10. கூகுள் வழியாக இலவச ஆன்ட்டி-வைரஸ் ஆப்ஸ் அல்லது சாப்டவேர்களை தேட வேண்டாம்!

samayam tamil

இலவசம் என்பது ஒரு மெல்லிய கோடு என்பதையும், எந்தவொரு வியாபாரியும் எதையுமே இலவசமாக கொடுப்பதில்லை என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இப்படியானதொரு தந்திரம் மிக்க வியாபார உலகில், ஆன்லைன் வழியாக அதுவும் கூகுள் தேடல் வழியாக இலவச வைரஸ் தடுப்பு பயன்பாடுகள் அல்லது மென்பொருளைத் தேடுவதென்பது எங்கு சென்று முடியும் என்று தெரியுமா? – போலியான தயாரிப்புகளை டவுன்லோட் செய்து டேட்டாவை இழப்பீர்கள் அல்லது கிளிக் செய்து-கிளிக் செய்து ஏதோவொரு மோசடிக்காரன் பணம் சம்பாதிப்பதற்கு உதவுவீர்கள்.

11. ஆன்லைனில் ஷாப்பிங்கிற்கான தள்ளுபடி கூப்பன் குறியீடுகளை கூகுளில் தேட வேண்டாம்!

samayam tamil

குறிப்பிட்ட ஷாப்பிங்கில் தள்ளுபடியை பெறுவதற்கான ஒரு கூப்பன் குறியீடு ஆனது உங்களுக்கு தானாக கிடைத்தால் அதில் எந்த சிக்கலும் இல்லை. மாறாக தள்ளுபடிகளுக்கான கூப்பன்களை கூகுளில் தேடினால், நீங்கள் போலி வலைத்தளங்களில் இறங்கலாம், அங்கே போலியான கூப்பன்கள் ஆனது உங்களுக்கு மிகவும் மலிவான விலைக்கு விற்கப்படலாம். அவ்வளவு ஏன்? உங்களின் வங்கி விவரங்கள் கூட திருடப்படலாம்.

12. கூகுள் வழியாக ஆபாசமாக எதையும் தேட வேண்டாம்!

samayam tamil

கூகுள் விளம்பரங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நாம் அனைவரும் நன்றாக அறிவோம். அறியாதவர்களுக்கு, கூகுளில் நீங்கள் தேடிய “மேட்டர்கள்” ஆனது, பிற்காலத்தில் நீங்கள் பார்வையிடும் மற்ற வலைத்தளங்களில் விளம்பரமாக காட்சிப்படும். அதாவது உங்கள் கூகுள் தேடல் வரலாற்றின் அடிப்படையின்கீழ் உங்களுக்கான விளம்பரங்கள் ஆனது பரிந்துரைக்கபப்டும் என்று அர்த்தம். ஆக நீங்கள் அலுவலகத்தில் இருக்கும் போது அல்லது குடும்பத்தினரின் முன்னால் இருக்கும் போது உங்களின் “ஆபாச தேடல்”களானது விளம்பரமாக எழாமல் இருக்க வேண்டும் என்றால், கூகுள் வழியாக ஆபாசமாக எதையும் தேட வேண்டாம்.

Content retrieved from: https://tamil.samayam.com/tech/tips-tricks/dont-google-these-12-things-from-online-banking-websites-to-free-antivirus-apps-or-software/articleshow/72181331.cms.

Title:

Schools Have More Severely Disturbed Students– What ‘s A Teacher To Do? Word Count: 1094 Summary: Teachers and Counselors: Does it seem to y...

Translate

Powered by Blogger.