சிவன் மனைவியின் பெண்ணுறுப்பை விஷ்ணு எதற்காக வெட்டி எறிந்தார்?... எங்கே எறிந்தார்?...
108 சக்தி பீடங்களில் பார்வதி தேவியின் பெண்ணுறுப்பு விழுந்த இடம் தான் காமக்யா தேவி கோவிலாக இருக்கிறது. சக்தி தேவியின் பெண்ணுறுப்பு எதற்காக இங்கே எறியப்பட்டது என்பது பற்றி தான் இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம்.
காமக்கியா தேவி ரகசியங்கள்
காமாக்யா கோவில் தென்னிந்தியாவில் அசாம் மாநிலத்தில் குவாகதி எனும் பகுதியில், நிலசல் மலையில் அமைந்துள்ளது. இது ரயில் நிலையத்திலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
இந்த காமக்கியா தேவி கோவில் தாந்திரீக தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த கோவிலில் காமக்கியா தேவி தவிர்த்து மேலும் பத்து அவதாரங்கள் உள்ளடக்கியுள்ளது. அதில் காளி துமாவதி, மாதங்கி, பகோலா, தாரா, கமலா, பைரவி, சின்னமஸ்தா புவனேஸ்வரி மற்றும் திரிபுரசுந்தரி. இங்குத் தேவியின் சிலை இல்லை ஆனால் கோவிலில் ஒரு ஓரத்தில் ஒரு குகை உள்ளது. அதில் பெண் கடவுளின் பெண்ணுறுப்பைக் கற்களில் செதுக்கி உள்ளது போன்ற ஒரு பிம்பம் உள்ளது.
சிவன் அவமதிப்பு
காமாக்யா தேவி கோவிலின் வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. இது 108 சக்தி பீடங்களில் ஒன்றாகும். சக்தி பீடத்தின் வரலாறானது, ஒருமுறை ஷக்தி தன் கணவர் சிவனிடம் தன்னுடைய தந்தையின் மகா யாகத்திற்குச் செல்ல அனுமதி கேட்டுள்ளார், ஆனால் சிவன் அதை மறுத்துள்ளார். தன் கணவன் சிவனின் அனுமதியையும் மீறி சக்தி தன் தந்தையின் மகா யாகத்தில் கலந்து கொள்ளச் சென்றுள்ளார். அந்த யாகத்தில் சிவனுக்கு அழைப்பு விடுக்கவில்லை மேலும் சக்தியின் தந்தை சிவனை அவமதித்ததாகக் கூறப்படுகிறது.
விஷ்ணு வெட்டி எறிந்த சக்திதேவி உடல்
தன்னுடைய கணவனை தன் தந்தை அவமதித்ததால், மனமுடைந்த சக்தி, தற்கொலை செய்து கொண்டார். தன் உயிரினும் மேலான மனைவி தற்கொலை செய்து கொண்டதை பொறுக்கமுடியாத சிவன் தனது மனைவியின் உடலைத் தோளில் வைத்துக் கோரத்தாண்டவம் ஆடி உள்ளார். சிவனை அமைதிப்படுத்த விஷ்ணு தனது சக்கரத்தின் மூலம் சக்தியின் உடலில் 108 துண்டுகளாக வெட்டி உள்ளார் அதில் ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு பகுதியில் விழுந்தது இந்த ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு பீடமானது. இதுதான் 108 சக்தி பீடத்தின் வரலாறு. அதில் சக்தியின் பெண்ணுறுப்பானது விழுந்த இடமே காமக்கியா தேவி கோவிலாகும்.
காமாக்யா கோவில் பெயர்க் காரணம்
காதலின் கடவுளான காமதேவா ஒரு சாபத்தின் மூலம் பிரிந்ததால் சக்தியின் பெண்ணுறுப்பை விடுதலை செய்து இந்த கோவிலுக்கு காமக்கியா தேவி கோவில் என பெயரிட்டதாக
கூறப்படுகிறது. மேலும் மக்கள் பலரும் காமாக்யா தேவி கோவிலில் சிவனும் சக்தியும் தங்களது காதலை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகின்றனர். அதனாலேயே இந்த கோவிலுக்கு காமக்கியா தேவி கோயில் என்று பெயர் வந்தது.
யார் காலத்து கோவில்
இந்த கோவிலின் வரலாறு மிகவும் பழமை வாய்ந்தது, இந்த கோவில் 1665 ஆம் ஆண்டு அரசர் நாராயணன் அவர்களால் கட்டப்பட்டது. இதற்கு முன்னர் அலகாபாத் அரசு சமுத்திரகுப்தர் அவர்களின் ஆட்சியின் போது இந்த கோவிலுக்கான சுவடுகள் தெரிந்தது. இதற்கு முன்னரும் இந்த இடத்தில் இந்த கோவிலிருந்திருக்கலாம் எனக் கணித்துள்ளனர். எனவே மன்னர் மீண்டும் கோவிலை எழுப்பியுள்ளார் இந்த கோவிலில் 7 கோபுரங்களும் மூன்று தங்கக் கும்பங்கள் ஆல் ஆனது.
சக்தி வழிபாடு
முதலில் ஒரு சின்ன சந்து வழியாக நாம் நகர்ந்து சென்றால் உள்ளே சற்று இருட்டான அறை இருக்கின்றது அதில் கடவுள்களின் உருவம் பொறிக்கப்பட்ட கற்கள் சுவர்களில் இருக்கின்றது அதில் தேவியின் சிலையில் கிரீடம் உள்ளது அதற்குப் பின்பு ஒரு படி இருக்கின்றது அதன் வழியே செல்லும்போது உள்ளே ஒரு சின்ன குளம் போன்ற ஒரு இடம் இருக்கின்றது அதிலிருந்துதான் பூஜை நடைபெறும் எனக் கூறுகின்றனர். அதிலிருந்து நாம் பார்க்கும் பொழுது ஒரு பெண் அடையாளம் போன்ற பொறிக்கப்பட்ட கல் இருக்கிறது அதைச் சிகப்பு துணியால் மூடி வைத்துள்ளனர்.
தினமும் காலை 8 மணி முதல் இரவு சூரிய அஸ்தமனம் வரை கோவில் நடை திறந்திருக்கும். மதியம் ஒன்று முப்பது மணிக்கு உணவு இடைவேளையில் நடை சாத்தி இருக்கும்.
மாதவிடாயும் பிரம்மபுத்திராவும்
காமக்கியா தேவி, மாதவிடாய் தெய்வம் என்றும் சிலர் அழைக்கின்றனர். தேவியின் பெண்ணுறுப்பானது இங்கே இருப்பதால் வருடா வருடம் ஜூன் மாதம் மாதவிடாய் வரும் என்று நம்புகின்றனர். அந்த சமயம் அருகில் இருக்கும் பிரம்ம புத்திரா நதி சிவப்பு நிறமாக மாறும் எனச் சொல்கின்றனர் அந்த சமயத்தில் மூன்று நாட்கள் கோவிலின் நடை அடைத்திருக்கும் உள்ளே பூஜைகள் நடக்கும் எனக் கூறுகின்றனர். இந்தப் பெண் கடவுள் பெண்களின் சக்தி வாய்ந்த கடவுள் எனவும் கூறுகின்றனர். இங்குப் பெண் பக்தைகள் அதிகம் வருகை தருகிறார்கள்.
Post a Comment