Header Ads

சிவனுக்கு மூன்று மகன்கள் இல்லை ஆறு மகன்கள்? - இதோ புராண கதைகள்

சைவ மதத்தின் மூலக்கடவுளாக ஈசன் இருக்கிறார். மும்மூர்த்திகளில் ஒருவராகவும் உள்ளார்‌. பார்வதியின் கணவராக அறியப்படும் சிவபெருமானுக்கு மொத்தம் எத்தனை மகன்கள் உள்ளார்கள் என்பதை அறிவீர்களா? விநாயகர், முருகன் மற்றும் ஐயப்பன் ஆகியோரை மட்டுமே மகன்களாக நினைக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த பகுதி உங்ககளுக்கானது தான். வாருங்கள் கதையின் உள்ளே போகலாம்!

சிவனின் மகன்களான அய்யப்பன், அந்தகன், குஜன்

சைவ மதத்தின் மூலக்கடவுளாக ஈசன் இருக்கிறார். மும்மூர்த்திகளில் ஒருவராகவும் உள்ளார்‌. பார்வதியின் கணவராக அறியப்படும் சிவபெருமானுக்கு மொத்தம் எத்தனை மகன்கள் உள்ளார்கள் என்பதை அறிவீர்களா? விநாயகர், முருகன் மற்றும் ஐயப்பன் ஆகியோரை மட்டுமே மகன்களாக நினைக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த பகுதி உங்ககளுக்கானது தான். வாருங்கள் கதையின் உள்ளே போகலாம்!

சிவ பெருமானுக்கு மொத்தம் எத்தனை மகன்கள்?

சிவபெருமானின் 2 மகன்களான பிள்ளையார் மற்றும் முருகன் ஆகியோரைப் பற்றி நாம் அனைவரும் நன்கு அறிந்திருப்போம். ஆனால் அவர்கள் மட்டுமல்ல மேலும் 4 மகன்கள் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?

புராணக் கதை

சிவ புராணம், மகாபாரதம் போன்ற பல புராண இலக்கியங்களின் தகவல்கள் படி, சிவ பெருமானுக்கு ஆறு மகன்கள் இருப்பதாக அறிய முடிகிறது. நாம் இங்கே அவர்களின் கதைகளைப் பற்றி பார்ப்போம்.

 

அய்யப்பன்

சாஸ்தா என்று அழைக்கப்படும் அய்யப்பன் மிகவும் சக்திவாய்ந்த இந்து கடவுள்களில் ஒருவராக உள்ளார். அவர் கேரளாவில் அய்யப்பன் என்ற பெயரிலும் தமிழகத்தில் அய்யனார் என்ற பெயரிலும் மக்களால் வணங்கப்படுகிறார். சிவனும் விஷ்ணுவின் பெண் உருவமான மோகினியும் இணைந்து ஐயப்பன் பிறந்ததாக பெருவாரியாக நம்பப்படுகிறது.

 

ஒரு சிறந்த போர்வீரன்

அய்யப்பன் பரசுராமரிடம் தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொண்டார். எனவே அவர் ஒரு சிறந்த போர் வீரனாக அறியப்படுகிறார்.

அந்தகன்

இரண்யக்சன் என்ற அரக்கனின் மகனாக அந்தகன் வளர்ந்தான். இரண்யக்சனுக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லாததால் குழந்தை வேண்டி சிவ பெருமானிடம் தவமிருந்தார். சிவன் கண்ணை மூடியிருந்த சமயம் உலகமே இருளானது அந்த நேரத்தில் ஈசனுக்கும் பார்வதிக்கும் ஒரு குழந்தை பிறந்தது. அது அசுரத்தனத்தில் இருந்தது‌. அந்த குழந்தையை இரண்யக்சனுக்கு வழங்கினார். ஈசன் கண்ணை மூடிக் கொண்டிருந்த நேரத்தில் பிறந்ததால் அந்த குழந்தை பார்வையற்று பிறந்தது. அதனால் அந்த குழந்தை அந்தகன் என பெயர் பெற்றது. அந்தகன் என்றால் பார்வையற்றவன் என்று பொருள்.

 

சிவனால் கொல்லப்பட்டார்

அந்த அரக்கன் பார்வதியைத் துன்புறுத்த முயன்றபோது அவன் சிவ பெருமானால் கொல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது.

பௌமன் சிவ பெருமான் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் போது அவருடைய வியர்வை பூமியில் விழுந்தது. அதன் மூலம் ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தையைப் பூமா தேவி வளர்த்தார்.

பெயர் காரணம்

பூமா தேவி தன்னுடைய மகனை வளர்ப்பதைக் கண்டு சிவ பெருமான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அத்தகைய பூமா தேவிக்கு மரியாதை செலுத்தும் வகையில் அந்த மகனுக்கு பௌமன் என்று பெயரிட்டார். பௌமன் சிகப்பான கடவுளாக அடையாளப் படுத்தப்படுகிறார். மேலும் அவருக்கு நான்கு கைகள் உண்டாம்.

குஜன்

சிவ பெருமானின் ஒளியிலிருந்து வரும் கதிர்கள் பூமியின் மேற்பரப்பில் விழுந்த போது குஜன் பிறந்தார். குஜன் இரும்பின் கடவுளாக கருதப்படுகிறார்.

 

விண்வெளி

புராணக் கதைகளின்படி குஜன் வளர்ந்த பின்பு பூமியிலிருந்து அவர் விண்வெளிக்குச் சென்றார். குஜன் செவ்வாய் கிரகத்தில் வசிப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

விநாயகர்

விநாயகர்

கணபதி என்றும் பிள்ளையார் என்றும் கணேசன் என்றும் அழைக்கப்படும் விநாயகர் இந்து மதத்தில் மிகவும் பிரபலமான கடவுள்களில் ஒருவராவார். பிள்ளையார் திருமணம் செய்யாமல் பிரம்மச்சாரியாக இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

திருமணம்

மக்கள் பிள்ளையாரைப் பிரம்மச்சாரியாக நம்பினாலும், அவர் ரித்தி மற்றும் சித்தியைத் திருமணம் செய்ததாக பத்மபுராணம் கூறுகிறது.

 

மகாபாரதம் எழுதுதல்

வேத வியாசர் கதை சொல்ல சொல்ல பிள்ளையார் தான் மகாபாரதம் என்ற மாபெரும் காவியத்தை எழுதியதாக கூறப்படுகிறது.

​முருகன் பிறந்த கதை

முருகன்

சூரபத்மன் என்ற அசுரனையும் அவரது படைகளையும் வதம் செய்வதற்காக முருகப் பெருமான் அவதரித்தார். தென்னிந்தியாவில் அனைவரும் வழிபடும் பிரபலமான கடவுளாக முருகன் அறியப்படுகிறார். முருகப் பெருமான் சுப்பிரமணியன், கார்த்திகேயன், கந்தன், செந்தில், வேலவன் உள்ளிட்ட பல பெயர்களில் அறியப்படுகிறார்.

தைரியமான கடவுள்

முருகன் சிறுவனாகவும் இளைஞனாகவும் அறியப்பட்டாலும் அவர் தைரியமானவராக சித்தரிக்கப்படுகிறார், முருகன் வேலுடன் மயில் மீது ஏறி உலகை வலம் வருகிறார். மகன்களைப் பற்றி நாம் விவாதித்துக் கொண்டிருந்தாலும் அவருக்கு ஒரு மகள் இருப்பதாக கூறப்படுகிறது. யார் அந்த மகள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

சிவனின் மகள்

யார் அவர்?

அவரது பெயரைப் பற்றி இந்து மதத்தின் பல இலக்கிய கதைகளில் வந்தாலும் சிவபுராணம் அவரைப் பற்றிய நேரடி குறிப்பை வழங்குகிறது. அதில் அவருடைய கதையை நாம் அறிந்துக் கொள்ள முடியும்.

அசோக சுந்தரி

அன்னை பார்வதி தன்னைத் தனிமையில் இருந்து விடுவித்துக் கொள்வதற்காக ஒரு மரத்திலிருந்து உருவாக்கப்பட்டவர் தான் அசோக் சுந்தரி. அந்த குழந்தை பார்வதியின் அதிர்ச்சி அல்லது துக்கத்திலிருந்து விடுபட்டதால் அசோகம் என்ற பெயரைப் பெற்றார். மேலும் அவர் அழகாக இருந்ததால் சுந்தரி எனவும் வழங்கப்பட்டார்.

 

உப்பு தெய்வம்

உப்பு தெய்வம்

விநாயகரின் தலை துண்டிக்கப்பட்ட போது அசோக் சுந்தரி உடனிருந்ததாகவும் கூறப்படுகிறது‌. அப்போது பார்வதி மிகவும் கோபமாக இருந்ததாகவும் சுந்தரி உப்பு சாக்கின் பின்னாடி பயந்து ஒளிந்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் தனது தந்தையான சிவபெருமானால் சமாதானப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த நிகழ்விலிருந்து அவர் உப்புடன் தொடர்புபடுத்தப்பட்டார்.

​​​மானசா தெய்வம்

ஒளியின் தெய்வம்

தமிழ்நாட்டில் சிவன் கோயில்களில் ஒருவர் ஒளியின் தெய்வமான ஜோதியைக் கடக்காமல் வெளிவர முடியாது. அந்த ஜோதியானது சிவனின் ஒளிவட்டத்திலிருந்து வந்ததால் அதுவும் ஒரு மகனாக கருதப்படுகிறது.

மற்றொரு கதை

இதைத் தவிர பெங்காலி நாட்டுப்புறக் கதைகளில், பாம்புக் கடியைக் குணப்படுத்தும் தெய்வமான மானசா, பாம்புகளின் அரசரான வாசுகியின் சகோதரி ஆவார். சிவ பெருமானின் விந்தானது பாம்புகளின் தாயான கத்ருவால் செதுக்கப்பட்ட சிலையில் பட்டபோது மானசா பிறந்தார்.

Title:

Schools Have More Severely Disturbed Students– What ‘s A Teacher To Do? Word Count: 1094 Summary: Teachers and Counselors: Does it seem to y...

Translate

Powered by Blogger.